100 நாள் வேலை திட்டத்தை வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

மதுராந்தகம் அருகே பாக்கம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தை வழங்க கோரி பொதுமக்கள் திடீர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்போராட்டம் செய்ய முயன்றதால் பரபரப்பு

Update: 2024-12-27 07:47 GMT
மதுராந்தகம் அருகே பாக்கம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தை வழங்க கோரி பொதுமக்கள் திடீர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்போராட்டம் செய்ய முயன்றதால் பரபரப்பு செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த பாக்கம் ஊராட்சியில் பாக்கம் தாதங்குப்பம் வயலூர் ஒழுப்பாக்கம் ஆகிய கிராமங்கள் அடங்கியது இந்த ஊராட்சியில் உள்ள கிராமத்தில் இந்த ஆண்டு முழுமையாக 20 நாட்கள் கூட நூறு நாள் வேலை வழங்கி உள்ளதாகவும் மேலும் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து இக் கிராமமக்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்படவில்லை எனவும் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அதிகாரியில் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறி 100 நாள் வேலை வழங்க வேண்டும் என இரு தேசிய நெடுஞ்சாலைகளில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.அப்பொழுது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.. இருந்தும் தொடர்ந்து அதிகாரிகள் வரும் வரை சாலை கைவிடமாட்டோம் என கிராம கூட்டு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News