100 சதவிகிதம் வட்டி கேட்டு கொலை மிரட்டல்

100 சதவிகிதம் வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி-யிடம் பாதிக்கப்பட்டவர் புகார் பரபரப்பு;

Update: 2025-07-29 12:34 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனியை தொப்பம்பட்டியை சேர்ந்தவர் முருக பிரகாஷ் வயது 41. இவருக்கு புதுக்கோட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நண்பர் மூலம் அறிமுகமானார். பின்னர் புதுக்கோட்டை கார்த்திகேயன் முருக பிரகாஷிடம் இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து இவருவரும் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகப்பிரகாசிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மருத்துவ செலவிற்காக கார்த்திகேயனிடம் 10 வட்டிக்கு ஒரு லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இதனையடுத்து நான்கு மாதங்களாக மாதம் 10,000 வீதம் 40 ஆயிரம் வட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில் முருக பிரகாஷிற்கு மருத்துவ செலவிற்காக கூடுதலாக ரூ 2 லட்சம் தேவைப்பட்டது. பணத்திற்காக புதுக்கோட்டை கார்த்திகேயனிடம் அணுகியுள்ளார். அப்பொழுது மொட்டையாக ஒன்றுக்கு ஒன்று வட்டி என கூறியுள்ளார் கார்த்திகேயன். இந்நிலையில் முருக பிரகாஷ் வட்டி பணம் கொடுக்க சென்றபோது ஒரு லட்சத்திற்கு 100% வட்டி வேண்டுமென கேட்டார். ஒரு வட்டி என கூறிவிட்டு தற்பொழுது 100% வட்டி என கூறினால் என்னால் வட்டி கட்ட இயலாது என கூறியுள்ளார். நான் தனிப்பட்ட முறையில் இஷ்டத்திற்கு வட்டி குறைக்க முடியாது இது பல அரசு அதிகாரிகளின் பணம் ஆகையால் 100% வட்டி கொடுத்து தான் ஆக வேண்டும். என்ன மிரட்டி உள்ளார். இதனிடையே கடந்த வாரம் செல்போனில் அழைத்த கார்த்திகேயன் பணம் என்னிடம் கொடுத்தவர்கள் மோசமானவர்கள் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள்மேலும் எனது செல்போனில் DPயை பார்த்தால் உனக்கு தெரியும் ஆகவே பணத்தை உடனடியாக அசல் வட்டியினை திருப்பி தர வேண்டும் என மிரட்டி உள்ளார். அசலும் வட்டியும் சேர்ந்து 42 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் வீடு புகுந்து அடித்து பணத்தை பெற்றுக் கொள்வேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆகவே தனது உயிருக்கு பாதுகாப்பும், கந்து வட்டியிலிருந்து தன்னை பாதுகாக்க வேண்டும் என முருக பிரகாஷ் இன்று 29.07.25 திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீபிடம் புகார் மனு அளித்தார்.

Similar News