100 நாள் வேலை திட்டம் பணியாளர்களுக்கான கருத்தரங்கம்

மலைக்கோவிலூரில் 100 நாள் வேலை திட்டம் பணியாளர்களுக்கான கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-08 14:27 GMT

மலைக்கோவிலூரில் 100 நாள் வேலை திட்டம் பணியாளர்களுக்கான கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகம்பள்ளி ஊராட்சியில் உள்ள மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நாகம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமையில், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கான கருத்தரங்க கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாகம்பள்ளி ஊராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்தர், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டம் பணியில் சேர்வதற்கான தகுதிகள், வரன்முறைகள், வழங்கப்படும் ஊதியம், வழங்கப்படும் பணி காலம், போன்றவற்றை எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News