100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தென்காசி மாவட்டம்,வாசுதேவநல்லூரில் 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-06-26 05:57 GMT

பிளாஸ்டிக் பறிமுதல் 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஸ்வரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். இது குறித்து விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News