தேனியில் 100 கி.மீ. தூரம் நடைபயண பேரணி

தேனியில் 100 கி.மீ. தூரம் நடைபயண பேரணி நடைபெற்றது.

Update: 2024-04-16 15:58 GMT

பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

33.தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, அனைவரும் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 100 கி.மீ. தேர்தல் விழிப்புணர்வு நடைபயண பேரணி இன்றுடன் (16.04.2024) 95 கி.மீ. தூரம் எட்டியது.

33.தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 100% வாக்களிப்பை பதிவு செய்வதற்காக பல்வேறு விதமான விழிப்புணர்வு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 100 கி.மீ. நடைபயண பேரணி நடத்த திட்டமிடபட்டு நேற்று வரை 9 நாட்களில் 85 கி.மீ தூரம் நிறைவுபெற்றது.

பத்தாம் நாளாக இன்று பெரியகுளம் பகுதியில் 10 கி.மீ தூரம் விழிப்புணர்வு நடைபயண பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணி தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி, புத்தர் பள்ளி, மகாத்மா காந்தி ரோடு, சாஸ்திரி நகர், தென்கரை பேரூராட்சி தண்ணீர்துரை நகர், வ.உ.சி. நகர், முத்தாலம்மன் கோயில், பாரதிதாசன் தெரு, நேதாஜி தெரு, வழியாக லெட்சுமிபுரம் ஊராட்சி வரை சென்று நிறைவு பெற்றது.

இப்பேரணி நாளை காலை 6.00 மணி அளவில் வடபுதுப்பட்டி, ஊஞ்சாம்பட்டி, அன்னஞ்சி, பொம்மையகவுண்டன்பட்டி, தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News