100 சதவீத மானியத்தில் தக்காளி, மிளகாய் நாற்றுக்கள்
ஒட்டன்சத்திரத்தில் 100 சதவீத மானியத்தில் தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் வழங்கப்படுகின்றன.
Update: 2023-12-01 09:39 GMT
ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் முருங்கை, தக்காளி, மிளகாய், பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இதையடுத்து விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அலுவலர்களால் சாகுபடி தொழில்நுட்பம், பூச்சி நோய் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், 100 சதவீத மானியத்தில் தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் முதல் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை விவசாயிகளுக்கு தேவையான நாற்றுக்கள் வழங்கப்படும்.இதற்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று, ஒட்டன்சத்திரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முத்தரசு தெரிவித்துள்ளார்.