திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா துவக்கம்

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா துவங்கியது.

Update: 2024-02-07 09:16 GMT

சுதந்திர போராட்ட காலத்தில்காந்திய கிராமிய பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்த சபர்மதியில் காந்திய ஆசிரமத்தை காந்தியார் தொடங்கி நடத்தி வந்தார் அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் காந்தி ஆசிரமங்கள் தொடங்கப்பட்டது.

அதன்படி திருச்செங்கோட்டில் ராஜாஜி பெரியார் ஈ வே ரா ஆகியோர்னுடைய முயற்சியால் திருச்செங்கோடு புதுப்பாளையம் பகுதியில்ரத்ன சபாபதி கவுண்டர் என்ற ஜமீன்தார் கொடுத்த நான்கு ஏக்கர் நிலத்தில் காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டது,காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதை ஒட்டி நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காந்தி ஆசிரம தலைவர் ஆரவமுதன் தலைமை வகித்து வரவேற்பு உரையாற்றினார், காந்தி ஆசிரமம் வரலாறு குறித்து காந்தி ஆசிரம பொருளாளர் குமார் எடுத்துக் கூறினார்.சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் துணைத் தலைவர் எம் என் ரெட்டி, மகேந்திரா கல்வி நிலையங்களின் நிறுவன தலைவர் எம் ஜி பரத் குமார், புதுப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.காந்தி ஆசிரமத்திற்கான தண்ணீர் தேவைகளை தீர்த்து வைக்க சோலார் பிளான்ட் அமைக்கப்பட்டிருந்தது

இதனை ஜெ எஸ் டபுள்யு ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தினர் தங்களது சொந்த செலவில் அமைத்துக் கொடுத்திருந்தனர். அதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் நிறுவனத்தின் துணைத் தலைவர் எம் என் ரெட்டி சோலார் பிளான்ட்டை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசிய போது கூறியதாவது திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் இருப்பதே தற்போது பலருக்கு தெரிவதில்லை காந்திய கிராமிய பொருளாதார கொள்கைகளை நடைமுறைப் படுத்த1924 இல் பெரியாரின் முயற்சியால் ராஜாஜியின் விருப்பத்தை நிறைவேற்ற புதுப்பாளையம் ஜமீன்தார் ரத்தினசபாபதி கவுண்டர் நாலு ஏக்கர் நிலம் கொடுக்க அதில் உருவாக்கப்பட்ட இந்த காந்தி ஆசிரமம் தற்போது நூற்றாண்டை எட்டியுள்ளது

நூற்றாண்டு துவக்க விழா எளிமையாக நடைபெற்றாலும் நூற்றாண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட வேண்டும் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளில் உள்ள மாணவிகளை அழைத்து வந்து அடிமை இந்தியாவில் வாழ்ந்தவர்கள் எப்படி எல்லாம் சிரமப்பட்டு நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்திருக்கிறார்கள் என்பதை கற்றுக் கொடுக்க கற்றுக் கொடுக்க வேண்டும் மாணவர்கள் மத்தியில் தேசிய சிந்தனை வளர இது உதவும் அதேபோல் காந்தி ஆசிரமத்திற்கு சோலார் பிளான்ட் அமைத்துக் கொடுத்ததோடு ஜமீன் இளம்பிள்ளையிலும் ஒரு சோலார் யூனிட் அமைத்துக் கொடுத்துள்ள ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்திற்கு எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்மேலும் காந்தியாசிரமத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்

இது குறித்து அரசிடம் கோரிக்கை வைத்து திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கு மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கிற அனைத்து காந்தி ஆசிரமங்களுக்கும் ஜிஎஸ்டி வரியை நீக்கி கொடுத்துள்ளோம் என கூறினார்.நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் காந்தி ஆசிரம பணியாளர்கள்என சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News