ஜனவரி 8ல் தேதி மாநில முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை வேலை நிறுத்தம்
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை நடத்த போவதாக தெரிவித்தனர்
Update: 2023-12-20 02:22 GMT
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் வேலை நிறுத்த போராட்டம் தீர்மானம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இருப்பதாகவும் ஆனால் அது முழுமையாக இயக்கப்படவில்லை எனவும் வார விடுமுறை நாட்களில் 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படுவதாக கூறியவர் கோவிட்க்கு பின்னர் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சேவையில் இல்லாமால் அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்த ஆம்புலன்ஸ்களை தங்கு தடையின்றி இயக்குவதற்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சட்டப்படியான எட்டு மணிநேர வேலை வாய்ப்பினை வழங்க வலியுறுத்தியும்,தனியார் நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி வரும் ஜனவரி 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் ஜனவரி 3ம் தேதி மாநில முழுவதும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.