108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கலந்தாய்வு கூட்டம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது;

Update: 2024-02-24 11:49 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது.

மாநில பொதுச் செயலாளர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை எடுத்து நடத்தும் இஎம்ஆர்ஐ ஜிஎச்எஸ் ஒப்பந்த நிர்வாகம் தமிழகத்தில் பல நூறு ஆம்புலன்ஸ்களை இயக்காமல் உயிரிழப்புகளுக்கு தொழிலாளர்களை காரணம் காட்டும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பது,

தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் இஎம்ஆர்ஐ ஜிஎச்எஸ் நிர்வாகத்திற்கு துணை நிற்கும் சுகாதாரத்துறையை கண்டித்து முதல்வரிடம் புகார் மனு அளிப்பது, நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து மருத்துவ தொழிலாளர்களை ஒன்றினைத்து போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தெடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச் செயலாளர் இராஜேந்திரன் ஒப்பந்த நிறுவனத்திற்கு துணை நிற்கும் தமிழக சுகாதாரத்துறை கண்டித்து அனைத்து மருத்துவ தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார். கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பாஸ்கரன், மண்டலச் செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்டச் செயலாளர் அன்பழகன், துணைச் செயலாளர் இராஜசேகரன்,

துணைத்தலைவர் ஸ்டாலின், மாவட்டப் பொருளாளர் பாரதி உள்ளிட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்

Tags:    

Similar News