108 சங்காபிஷேக விழா

சிவகங்கை, குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் சங்காபிஷேக விழா நடந்தது.

Update: 2024-01-19 12:14 GMT

சிவகங்கை, குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் சங்காபிஷேக விழா நடந்தது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் புனித நீர் நிரப்பப்பட்ட வெண் சங்குகள் மற்றும் நவ கலசங்களை பூக்களால் அலங்கரித்தனர். தொடர்ந்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது.

யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து முருகப்பெருமானின் மூல மந்திரங்கள் கூறி பூர்ணாகுதி அளிக்கப்பட்டன. நிறைவாக கலசங்களுக்கு உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு வேத மந்திரங்கள் முழங்க 108 சங்குகள் மற்றும் கலசங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்

Tags:    

Similar News