மானாமதுரை அருகே 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
மானாமதுரை அருகே 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை, தாயுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-28 09:14 GMT
ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை
சாலை கிராமம் அருகே உள்ள மனங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் மனைவி ஈஸ்வரி (வயது 24) இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் வழியிலே அதிக வலி ஏற்படவே அவருக்கு மருத்துவ உதவியாளர் ராகினி பிரசவம் பார்த்தார்.
பிரசவத்தின்போது பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்