10ம் வகுப்பு பொதுத்தேர்வு : நாமக்கல் மாவட்டத்தில் 93.51% தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 93.51% பேர் தேர்ச்சி அடைந்ததாக மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்தார்.

Update: 2024-05-10 08:25 GMT
பைல் படம் 

நாமக்கல் மாவட்டத்தில் மார்ச்/ஏப்ரல் 2024-ம் ஆண்டில் 296 பள்ளிகளை சார்ந்த 10,147 மாணவர்களும், 9,612 மாணவியர்களும் என மொத்தம் 19,759 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள். இதில் 9,318 மாணவர்களும், 9,159 மாணவியர்களும் என மொத்தம் 18,477 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.83%, மாணவியர்கள் 95.29% என மொத்தம் 93.51% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.53% கூடுதலாகி உள்ளது. மேலும், சென்ற ஆண்டு 15-ஆம் இடத்திலிருந்து இந்த ஆண்டு 14-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 163 அரசுப் பள்ளிகளை சார்ந்த மொத்தம் 11,626 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 10,563 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.86%. கடந்த ஆண்டை விட 0.62% கூடுதலாகி உள்ளது. 02 அரசு ஆதிதிராவிடநலப்பள்ளிகளைச் சார்ந்த 52 மாணவர்கள், 61 மாணவியர்கள் என 113 மொத்தம் பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 45 மாணவர்கள், 58 மாணவியர்கள் என மொத்தம் 103 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.15% ஆகும்.நாமக்கல் மாவட்டத்தில் 01 சமூக நலத்துறைப் பள்ளியினை சார்ந்த 9 மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதினார்கள். இதில் 7 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 77.78%. நாமக்கல் மாவட்டத்தில் 04 பழங்குடியினர் நல (GTR) பள்ளிகளை சார்ந்த 109 மாணவர்களும் 140 மாணவியர்களும் என மொத்தம் 249 பேர் தேர்வு எழுதினார்கள்.

இதில் 96 மாணவர்களும் 116 மாணவியர்களும் என மொத்தம் 212 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 85.14% ஆகும்.மாவட்டத்தில் கடந்தாண்டு 92 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருந்தது. இவ்வாண்டு 104 பள்ளிகள் 100% பெற்றுள்ளது. கடந்தாண்டை விட 12 பள்ளிகள் கூடுதலாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 30 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றது. இவ்வாண்டு 34 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் 1-ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் 1- அரசு உதவிபெறும் பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது என மொத்தம் 36 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்தாண்டை விட 6 அரசு பள்ளிகள் கூடுதலாக 100% பெற்றுள்ளது. தேர்வு எழுதியவர்கள் தமிழ் பாடத்தில் 97.91%, ஆங்கில பாடத்தில் 99.61%, கணித பாடத்தில் 98.02%, அறிவியல் பாடத்தில் 97.35% மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 96.57% மாணவ/மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News