10ம் வகுப்பு பொதுத்தேர்வு : விழுப்புரம் மாவட்டத்தில் 94.11 % தேர்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 94.11 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.;
தேர்வு முடிவுகளை வெளியிட்ட ஆட்சியர்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 364 பள்ளிகளைச் சேர்ந்த 24 ஆயிரத்து 93 மாணவர்கள் தேர்வு எழுதினர் இதில் 11456 மாணவர்களும் 11,217 மாணவிகள் என மொத்தம் 22,673 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதன் மூலம் 94.11 சதவீத மாணவ மாணவிகள் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர் .மேலும் 958 மாணவர்கள் 462 மாணவிகள் என 1420 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இந்த தேர்வு முடிவுகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.
மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் 10ம் இடம் பிடித்துள்ள நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு தேர்ச்சி 3.54 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் தோல்வியடைந்த மாணவர்கள் உடனடி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்டத்தில் கோடை காலங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை மற்ற வகுப்பு ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.