திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரத்தில் ஒரு மணி நேரத்தில் சிறுவன் உள்ளிட்ட 11 பேரை நேற்று தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் கடித்ததால் பாதிக்கப்பட்ட 5 ஆண்கள் 5 பெண்கள் சிறுவன் உள்ளிட்டோர் அம்பாசமுத்திரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.