11-21 வயதுடைய மாணவிகள் கலந்து கொண்டு மினி மாரத்தான்

மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற மினி மரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

Update: 2024-08-19 03:07 GMT
மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் துவங்கிய மினி மராத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த போட்டியில் பாலின பாகுபாடு அடிப்படையில் குழந்தைகளின் பாலினம் அறிந்து கொல்லப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகள் பிறப்பினை உறுதி செய்து, அவர்களின் கல்வி, திறன் மற்றும் பங்கேற்பினை மேம்படுத்தல், மற்றும் பெண்களை பாதுகாத்தலை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போட்டியில் 11 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று 5 கிலோமீட்டர் தூரம் சென்று மன்னம்பந்தல் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. சென்னை எம் ஓ பி கல்லூரி மாணவி கீதாஞ்சலி முதலிடத்தையும் குட் சாமாரிட்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆபியா இரண்டாம் இடத்தையும், எட்டாம் வகுப்பு மாணவி அனுரெக்சி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கௌரவித்தார்.

Similar News