வெறிநாய் கடித்து குழந்தை உட்பட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
ராசிபுரம் அருகே கவுண்டம்பாளையத்தில் வெறிநாய்க்கடித்து காயமடைந்த குழந்தை உட்பட 11 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அருந்ததியர் தெரு அருகே சாலையில் நடந்து சென்ற குந்தைகள்,பெண்கள் என உட்பட 11 நபர்களை வெறி நாய் கடித்துள்ளது. பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாயை அடித்து துரத்திவிட்டு படுகாயம் அடைந்தவர்களை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பலர் தனியார் மருத்துவமனையிலும், 1 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோல் தெருக்களில் சுற்றிவரும் நாய்களை ராசிபுரம் நகராட்சி நிர்வாகம், மற்றும் பேரூராட்சி நிர்வாகம் பிடித்து கருத்தடை செய்ய வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கவுண்டம்பாளையம் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற தெரு நாய்கள் கடித்து அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளையும் தெரு நாய் கடித்ததால் ஆவேசப்பட்டு அப்பகுதி மக்கள் நாயை அடித்துள்ளனர். எனவே விரைவில் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் லக்ஷ்மி 55 ,தங்கம்மாள் ராஜ் 76, வீரம்மால் ராஜ் 60, ஆறுமுகம் 45, வீராசாமி ரங்கன் 70, பெருமாள் 61, துரைசாமி 46, மற்றும் 2.வயது குழந்தை லெனின், ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.