1100 சடலங்கள் அடக்கம் - ரெட் கிராஸ் உறுப்பினருக்கு மாமனிதர் விருது
Update: 2023-12-10 04:41 GMT
ரெட் கிராஸ் உறுப்பினர் ஞானவேலிற்கு மாமனிதர் விருது
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருப்பூர் மாவட்ட ரெட் கிராஸ் கிளையின் பொதுக்குழு கூட்டத்தில் முகவரி இல்லாத, யாரும் உரிமை கோராத 1100க்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்த ரெட் கிராஸ் உறுப்பினர் ஞானவேலிற்கு ரெட் கிராஸ் திருப்பூர் மாவட்ட கிளையின் சார்பில் மாமனிதர் விருதினை திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ரெட் கிராஸ் கிளையின் சேர்மன் சண்முகவடிவேல் செயலாளர் தாமோதரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.