11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சி- முதலமைச்சர் வெளியிட்ட அடுத்த வீடியோ

11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சிக்கு திராவிட மாடல் ஆட்சி தான் சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வீடியோ வெளியிட்டுள்ளார்.;

Update: 2025-09-20 14:15 GMT
அந்த வீடியோவில், கல்வி, மருத்துவத்தரம், உள்கட்டமைப்பு, சட்டம், ஒழுங்கு என அனைத்தையும் எடுத்துக்காட்டுவது தான் பொருளாதார வளர்ச்சி. பலதுறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தனிபர் வருமானம், மக்களின் வாழ்க்கை தரம், வாங்கும் திறனை எடுத்துக்காட்டுவது ஜிடிபி. 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சராசரியாக 8.9 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளோம். கொரோனா பாதிப்பு, மத்திய அரசு நிதி வழங்க மறுத்தும் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதா வளர்ச்சி. அதிமுக ஆட்சியை விட தற்போது இரண்டு மடங்கு பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளோம் என்று தெரிவித்தார்.

Similar News