12 கிராம் தங்கத்தில் காரை வடிவமைத்து படைத்த நபர்
ஸ்ரீவில்லிபுத்தூர் 35 அங்குல நீளத்தில் டெஸ்டா கார்.... கின்னஸ் சாதனைக்காக 12 கிராம் தங்கத்தில் காரை வடிவமைத்து படைத்த நபர்;
ஸ்ரீவில்லிபுத்தூர் 35 அங்குல நீளத்தில் டெஸ்டா கார்.... கின்னஸ் சாதனைக்காக 12 கிராம் தங்கத்தில் காரை வடிவமைத்து படைத்த நபர்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நபர் கின்னஸ் சாதனைக்காக 12 கிராம் தங்கத்தில் ஒரு அங்குலம் அளவு உள்ள டெஸ்ட்டா காரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன். ஐந்தாம் வகுப்பு படித்திருக்கும் இவர் தங்க நகைகள் செய்யும் வேலை பார்த்து வருகிறார். படிப்பிற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பல்வேறு கின்னஸ் சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு 163 கிராம் வெள்ளியில் சிறிய மின்விசிறி ஒன்றை தயாரித்த இவர் 2004 ஆம் ஆண்டு 110 கிராம் வெள்ளியில் இருசக்கர வாகனம் ஒன்றை வடிவமைத்து சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு 24 மில்லி மீட்டர் அளவில் செஸ் போர்டு மற்றும் காயின்களை தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இவரின் இச்சாதனையை பாராட்டி அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இவரை நேரில் வரவழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.மேலும் அப்போதைய தமிழகத்தின் கவர்னராக இருந்த சுஜித் சிங் பர்னாலா மற்றும் கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி ஆகியோர் ஆகும் இவரது திறமையை வெகுவாக பாராட்டினார். நடிகர் கமலஹாசனின் ரசிகரான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒட்டி 260 மில்லிகிராம் தங்கத்தில் டார்ச் லைட் ஒன்றை வடிவமைத்து அவருக்கு பரிசாக வழங்கினார். தற்போது உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலன் மாஸ்க் நிறுவனத்தாரின் டெஸ்டா கார் ஒன்றை மணிகண்டன் 12 கிராம் தங்கத்தில் கின்னஸ் சாதனைக்காக உருவாக்கியுள்ளார். இக்காரானது சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. இக்காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் வரை இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு அம்சமாக காரில் ஆடியோ சிஸ்டம் மற்றும் முகப்பு விளக்குகள் ஆகியவைகள் இயங்கும் விதத்தில் இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.