திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள காக்கநல்லூர் கிராமத்தில் உள்ள மேல ஆவரைக்குளம்,கழுதைப் புலிக்குளம், காக்கநல்லூர் கொத்தம், பாறைகுளம் சிறுகால், காக்கநல்லூர் கடனா கால்வாய் ஆகிய பகுதிகளில் இன்று சுமார் 1200 பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவந்திபுரம் ஆறுமுகம்பட்டி நாடார் ஸ்போர்ட்ஸ் கிளப் சேர்மகணேஷ் சிறப்பாக செய்திருந்தார்.