பாலாற்று வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்களுக்கு 120-ம் ஆண்டு நினைவஞ்சலி

வாணியாம்பாடியில் உள்ள பாலாறு நினைவு தூணிற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் சமூக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2023-11-13 06:41 GMT

அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 1903 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பல ஏரிகள் உடைந்து பாலாற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் வாணியம்பாடியில் பாலாற்றின் அருகே இருந்த பல வீடுகள் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது.இதில் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாலாற்று வெள்ளத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வாணியம்பாடி சந்தை பகுதியில் வாணியம்பாடி நகராட்சி சார்பில் 5 அடி உயரத்திற்கு நினைவு தூண் வைக்கப்பட்டு ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் தேதி பாலாற்றை காக்க நினைக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாலாறு நினைவு தூணிற்கு மாலை அணிவித்து பாலாறு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் வாணியம்பாடியை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர் நீத்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நினைவு தூணிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார், பின்னர் பேசிய அவர் பாலாறு என்பது வாணியம்பாடி, ஆம்பூர் மக்களின் உயிர் ஓட்டம் மட்டுமல்ல, அது நமது இரத்த ஓட்டமும் கூட. பாலாற்றில் கழிவுகளை கலக்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் பாலாற்றை காக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு என பேசினார்...

Tags:    

Similar News