மயிலாடுதுறைக்கு ரயில் மூலம் 1290 டன் உரம் வருகை
மயிலாடுதுறை மாவட்ட விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தூத்துக்குடியிலிருந்து ரயில் மூலம் வந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 186000 ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,இதுவரை 137000 ஏக்கர்வரை நடவு பணிகள் முடிவடைந்துள்ளது. தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளது. இதுவரை 55,000 ஹெக்டர் பரப்பில் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளது.
விவசாயத்திற்குத் தேவையான யூரியா, பொட்டாஷ், டிஏபி, காம்ப்ளக்ஸ், போனற உரங்கள் மொத்தம் 4839 மெட்ரிக் டன் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்குத் தேவையான உரம் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து உரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
720 மெட்ரிக் டன் யூரியா, 320 டன் டிஏபி, 250 மெட்ரிக்டன் காம்ப்ளக்ஸ் என 1290 டன் உரம் சரக்கு ரயில் மூலம் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்துள்ளது. இதனை, 74 லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட தனியார் உர விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்தனர்.