13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது

கிரைம்;

Update: 2025-03-19 16:01 GMT
13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது
  • whatsapp icon
தஞ்சாவூர் அருகே 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை, அளித்த தந்தையை காவல்துறையினர் போக்சோவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.   தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த,  47 வயது கூலித் தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும், குடும்பப் பிரச்சினை காரணமாக, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனித்தனியாக வசித்து வருகின்றனர்.  இருப்பினும், 47 வயது கூலி தொழிலாளியும், அவரது  8 ஆம் வகுப்பு படிக்கும், 13 வயது மகளும் ஒரே வீட்டில், வசித்து வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களில்,தனது மகளுக்கு, கூலித் தொழிலாளி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால், கடந்த சில நாட்களாக சிறுமி பள்ளியில் சோர்வாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை, சிறுமி பள்ளியில் மயக்கமடைந்துள்ளார். இது குறித்து ஆசிரியர், சிறுமியை விசாரித்த போது, தனது தந்தை  பாலியல் தொல்லை அளித்து வருவதாகக் கூறி, அழுதுள்ளார். பிறகு, 1098 சைல்டு ஹெல்ப் லைன் மூலம், தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு, ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் தந்தையை புதன்கிழமை போக்சோ வழக்கில், கைது செய்தனர்.

Similar News