13 விருதுகள் பெற்ற தளபதி அரிமா சங்கம்

மாவட்ட அமைச்சரவை சார்பில் நடந்த பரிசு வழங்கும் விழாவில் குமாரபாளையம் தளபதி அரிமா சங்கம் 13 விருதுகள் பெற்றது.;

Update: 2025-06-30 12:05 GMT
அரிமா சங்க மாவட்ட அமைச்சரவை சார்பில் சிறந்த சேவை செய்த சங்கங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த அரிமா சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் கல்வி ஊக்கம், கண் சிகிச்சை முகாம் உள்ளிட்ட இலவச சிகிச்சை முகாம்கள், கண் தானம் பெறுதல், ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல், உள்ளிட்ட சேவைகள், சிறந்த தலைவர், செயலர், பொருளர், பதிவேடுகள் பராமரிப்பு என்பது உள்ளிட்ட பல வகைகளின் படி விருதுகள் வழங்கப்பட்டன. இதில் குமாரபாளையம் தளபதி அரிமா சங்கத்திற்கு கண் தானம் பெறுதல், மாவட்ட அளவில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல், இலவச மருத்துவ முகாம்கள், அதிக உறுப்பினர் சேர்க்கை என்பது உள்ளிட்ட சேவைகளுக்கு கூட்டு மாவட்ட அணியின் சார்பில் 13 சாதனை விருதுகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட ஆளுநர் செந்தில்குமார் வழங்க, பட்டய தலைவர் ஜெகதீஷ், மாவட்ட பசிப்பிணி தலைவர் சண்முகசுந்தரம், தலைவர் கதிர்வேல், செயலர் சிவராமன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

Similar News