உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.1.40 லட்சம் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூரில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ஒரு லட்சத்து 40, ஆயிரம் பணத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-04-14 12:12 GMT

பணம் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் சாலையில் உள்ள மருதையான் கோவில், பேருந்து நிறுத்தம் அருகில்,தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வாசுதேவன் வயது 32 என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ 1,40,,000 பணத்தை, சமூக பதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் தேன்மொழி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் கைப்பற்றி. பணத்தை குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News