1,400 கிலோ தங்கம் பறிமுதல் விவகாரம்: அறிக்கைக்கு காத்திருப்பு

1,400 கிலோ தங்கம் பறிமுதல் விவகாரம்: வருமான வரித் துறையின் அறிக்கையை, எதிர்பார்ப்பதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்

Update: 2024-04-18 13:50 GMT

மாவட்ட ஆட்சியர் 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் - -குன்றத்துார் நெடுஞ்சாலையில், குன்றத்துார் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே வந்த 'பிரிங்க்ஸ்' என்ற தனியார் 'செக்யூரிட்டி' நிறுவனத்தின் மினி கன்டெய்னர் லாரி மற்றும் மினி வேனை மடக்கி சோதனை செய்தனர்.

இதில், மினி லாரியில் 1,000 கிலோ தங்கமும், மினி வேனில் 400 கிலோ தங்கமும் இருந்தது. விசாரணையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் அருகே மண்ணுாரில் உள்ள தனியார் கிடங்கிற்கு எடுத்து செல்வது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 1,400 கிலோ தங்கத்தில், 400 கிலோ தங்கத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்தன. இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கருவூலத்தில் தங்க கட்டிகள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி எஸ்.பி., அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பறிமுதல் தங்கத்தின் எடை சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளில், வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து, தங்கத்திற்கான ஆவணங்களை, வருமான வரித் துறைக்கு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வருமான வரித் துறையின் அறிக்கையை, எதிர்பார்ப்பதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News