143 கிலோ புகையிலை பொருட்கள், கார் பறிமுதல், இருவர் கைது
குமாரபாளையத்தில் 143 கிலோ புகையிலை பொருட்கள், கார் பறிமுதல் செய்ததுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் புதிய காவேரி பாலம் பகுதியில் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ குணசேகரன் உள்ளிட்ட பலர் நேற்று காலை 07:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வெள்ளை நிற மாருதி எக்கோ கார் வந்தது. போலீசார் அந்த காரை சோதனை செய்ததில், அதில் உள்ள மூட்டைகளில் புகையிலை பொருட்கள் 142.750 கிலோ இருந்தது. இதனையும், காரையும் கைப்பற்றி, இதனை கொண்டுவந்த பவானியை சேர்ந்த வில்சன், 67, என்பவரை கைது செய்தனர். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றுக்கொண்டிருந்த திருமுருகன், 58, என்பவரை கைது செய்து, 10 பாக்கெட் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.