விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 1.5 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 1.5 லட்சம் பறிமுதல்.தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை.;
Update: 2024-04-04 15:27 GMT
கண்காணிப்பு குழு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ஆனந்தி தலைமையிலான அதிகாரிகள் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் கூட்டுரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, ஸ்கூட்டரை ஓட்டி வந்த 25 வயது இளம்பெண் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து தனி தாசில்தார் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர்.