வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை
துறையூர் அருகே பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் நேற்று துறையூர் அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் உறவினர் இல்ல துக்க நிகழ்வுக்காக குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இன்று வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகள் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து நடராஜன் துறையூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மறுமணம் நபர்களை தொலைபேசி தேடி வருகின்றனர். போட்டிருந்த வீட்டில் துணி கிரகமாக நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.