குமரியில் 15 ஆயிரம் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு
170 இனங்கள் கண்டுபிடிப்பு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் மூலமாக நேற்று 28-ம் தேதி பறவைகள் கணக்கெடுப்பு
By : King 24x7 Angel
Update: 2024-01-29 11:52 GMT
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் மூலமாக நேற்று 28-ம் தேதி பறவைகள் கணக்கெடுப்பு ஈர நில, சதுப்பு நில பகுதிகளிலும் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் புத்தளம், சாமித்தோப்பு, சுசீந்திரம், தேரூர், தத்தையார் குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் குளங்கள் மற்றும் சதுப்பு நில பகுதிகளில் பல்வேறு குழுக்களாக பிரித்து, துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக 27-ம் தேதி பறவைகள் கணக்கெடுப்பு பற்றிய பயிற்சி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் (பொறுப்பு) அலுவலர் இளையராஜா முன்னிலையில் அளிக்கப்பட்டது. கணக்கெடுப்பிற்க்கான பயிற்சி மற்றும் கணக்கெடுப்பின் முந்தைய ஏற்பாடுகளை பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் வித்யாதர், இ.வ.ப ., முன்னிலையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் மூலம் நடந்தது. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 153 பறவை இனங்களை சேர்ந்த 10 ஆயிரம் பறவைகளும், இந்த ஆண்டு கூடுதலாக 170 பறவை இனங்களை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டது. இந்த பறவைகள் கணக்கெடுப்பில் 70க்கு மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.