தொமுச சார்பில் 15வது ஊதிய ஒப்பந்த கோரிக்கை விளக்க கூட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருவண்ணாமலை விழுப்புரம் வேலூர் காஞ்சிபுரம் கடலூர் ஆகிய மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக திருவண்ணாமலை சாரோன் பகுதியில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் 15வது ஊதிய ஒப்பந்த கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை பொதுச் செயலாளர் க.சௌந்தர்ராசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விழுப்புரம் பொதுச் செயலாளர் வி.சேகர் அனைவரையும் வரவேற்றார். தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன், போக்குவரத்து கூட்டமைப்பு அமைப்பு செயலாளர் எம். தனசேகரன், கடலூர் பொதுச் செயலாளர் தங்க ஆனந்தன் ஆகியோர் இந்த விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய சங்க நிர்வாகிகள், பணிமனை நிர்வாகிகள், அனைத்து தரப்பு தொழிலாளர்கள் மத்தியில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், விளக்கியும் சிறப்புரை ஆற்றினர். பொதுச் செயலாளர் வேலூர் தா.ரமேஷ், பொதுச் செயலாளர் காஞ்சிபுரம் கே.ரவி, மண்டலத் தலைவர்கள் கடலூர் பி.பழனிவேல் விழுப்புரம் டி.ஞானசேகரன், திருவண்ணாமலை ஜி.நடராஜன், வேலூர் எஸ். மணி, காஞ்சிபுரம் எம்.சுதாகர், கடலூர் பால செந்தில்நாதன், விழுப்புரம் எம்.குமாரசாமி. வேலூர் மு.கி மு.கிருஷ்ணன், காஞ்சிபுரம் ஏ.முரளி, வேலூர் வி.பசுபதி, காஞ்சிபுரம் இ.குணசேகரன் மற்றும் நிர்வாக பணியாளர்கள் சங்க திருவண்ணாமலை எஸ்.பரசுராமன், விழுப்புரம் வாலிபால் எம்.மணி,கடலூர் டி.வேல்முருகன், வேலூர் பி.விஜயகுமார், காஞ்சிபுரம் ஜெ.லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன் பேசியதாவது, கடந்த 1977 - 78 ஆகிய ஆண்டுகளில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் வெற்றிகரமான வேலை நிறுத்த போராட்டங்களும், அதனை தொடர்ந்து 1992, 2001, 2013-14, 2015-16 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் தொழிலாளர்களின் நலனுக்காக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வெற்றிகரமான வேலை நிறுத்தங்கள் செய்ததை நிர்வாகிகளிடம் நினைவுபடுத்தி பேசிய அவர் அதனைத் தொடர்ந்து எடப்பாடி ஆட்சி காலத்திலும் 2 வேலை நிறுத்தங்கள் வெற்றிகரமாக செய்ததையும் இதுபோன்று சிறப்பான வேலை நிறுத்தங்கள் நடைபெற்ற ஆட்சி அதிமுகவில் தான் என்றார். நல்ல ஒப்பந்தங்கள் போடப்பட்ட ஆட்சி திமுக என்றும், நல்ல வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்ற ஆட்சி அதிமுக என்றும் விமர்சித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு தொமுச நடத்திய பல்வேறு போராட்டத்தில் திமுகவும் தொமுசவும் பரந்து விரிந்த நோக்கத்தில் பார்த்ததால் தான் 1 லட்சத்து 25 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளருக்கு ஊதிய பொருளாளர் நடராஜன உயர்வு கிடைக்கப்பெற்றது என்று பேசினார். திமுக ஆட்சி போக்குவரத்து தொழிலாளர்களுக்காக தங்கு தடையின்றி போராடி ஊதிய உயர்வு பெற்று தந்ததை சுட்டிக்காட்டி பேசினார். மகளிர் உரிமை பயணத் தொகைக்காக 2800 கோடி, மாணவர் இலவச பயணத்திற்காக 1500 கோடி. டீசல் மானியமாக 2000 கோடி, மூத்த குடிமக்கள் பயணிக்க 22.09 கோடி, ஷேர் கேப்பிட்டலாக 900 கோடி என சுமார் 7,200 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு போக்குவரத்து துறைக்காக வழங்க உள்ளதை சுட்டிக்காட்டி பேசினார். தமிழ்நாட்டு மகளிரின் தந்தையாக சகோதரனாக உள்ள தமிழ்நாடு முதல்வர் பிரிபெய்ட் திட்டமாக மகளிருக்காக 2800 கோடியை கொடுத்ததால் தான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மகளிர்கள் சொர்ணலட்சுமியாக தோன்றி சம்பளம் கிடைக்கிறது என்று பேசினார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் சட்டம் இயற்றி தேசியமயமாக்கியதை தமிழ்நாடு முதல்வர் சத்தம் இல்லாமல் தேசியமயம் ஆக்கினார் என்று பேசிய அவர், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போக்குவரத்து பணிமனையில் பணி மற்றும் நிரந்தர சம்பளம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பேசினார். 5000 தொமுச தொழிலாளிகள் தண்டனையிலிருந்து பாதுகாக்க வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளிகளுக்கு அகவிலைப்படி பெற்று தர வேண்டும் என்பதுதான் தொமுசவின் முக்கிய இரண்டுகோரிக்கைகள் என்றும் அதனை விரைவில் தமிழ்நாடு முதல்வர் பெற்றுத்தந்து தளபதி ஆட்சி வெற்றி நடைபோடும் என்றார். போக்குவரத்து தொழிலாளியின் வரவுக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாசத் தொகையை தர தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் தொமுச அதனை பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் அரசு தர தயாராக உள்ளதாகவும் கூறினார். புதிய போக்குவரத்து பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
பொதுவான நிலை ஆணைகள் நிறைவேற்றிட வேண்டும், வேலை நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், ஓட்டுகின்ற நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றிட அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். தொழிற்சங்க போராட்டங்கள் அரசியல் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்ட தொழிலாளி நஷ்டம் அடைந்தால் அந்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் அவரவர் பெற்று வரும் சம்பளத்தில் 25 சதவீதம் ஊதிய உயர்வாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 62 கோரிக்கைகளை தொமுச பேரவை விரைவில் வென்றெடுக்கும் என்றார். திமுகழகம் மற்றும் தமிழ்நாடு அரசு செய்த சாதனைகளை தொமுச நிர்வாகிகள் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்றார். நிறைவாக தி.மலை பொருளாளர் எஸ். மோகனரங்கன் நன்றியுரை கூறினார்.