17 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கையில் 17 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்;

Update: 2025-04-21 12:29 GMT
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.50.000/- மதிப்பீட்டிலான உயர்கல்வி உதவித்தொகைக்கான ஆணையினையும், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000/-வீதம் மொத்தம் ரூ.2.00.000/- மதிப்பீட்டிலான திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும், 04 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 2,15,000/- மதிப்பீட்டிலான இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.13.200/- மதிப்பீட்டிலான நவீன வாசிக்கும் கருவியினையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.3,285/- மதிப்பீட்டிலான காதொலிக்கருவினையும் என ஆக மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ. 4,81,485/-மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்.

Similar News