1.73 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள்
அய்யலூர் பேரூராட்சி மன்ற கூட்டம் 1.73 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள்;
அய்யலூர் பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கருப்பன் தலைமை தாங்கினார். பேரூராட்சி பொறுப்பு செயல் அலுவலர் பத்ம லதா பேரூராட்சி துணைத் தலைவர் செந்தில் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் பேரூராட்சி சிறப்பு நிதி மூலம் மூணாவது வார்டு முடக்குப்பட்டியில் 31 லட்சம் ரூபாய்க்கு தார் சாலை அமைத்தல், 12 வது வார்டு மல்லமநாயக்கன்பட்டியில் 37 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், 1 வது வார்டு வேங்கனூரில் 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், நகர் புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 வது வார்டு தங்கம்மா பட்டியில் 27.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 14 வார்டு கோம்பையில் 5.50 லட்சம் மதிப்பீட்டில் மயானம் அமைத்தல் மற்றும் 15 வது நிதி ஆணைய சுகாதார மானியத்தின் கீழ் 2 வது வார்டு நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் 75 லட்ச ரூபாய் கூடுதல் கட்டிடம் கட்டிடம் கட்டுதல் போன்ற தீர்மானங்களுக்கு மன்றம் அங்கீகரித்தது. கூட்டம் முடிவில் இளநிலை உதவியாளர் அல்லிமுத்து நன்றி உரையாற்றினார்.