18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவேண்டும் தேர்தல் கமிஷன் பார்வையாளர் அறிவுரை.

நாமக்கல் மாவட்டம் கடந்த தேர்தல்களில் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வாக்குபதிவுகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டுள்ளது. நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு உப்பு கழகம் முனைவர் C.N.மகேஸ்வரன் தகவல்.

Update: 2024-11-11 19:11 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றம் முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகின்றதா என்பதை கண்காணிக்க இந்திய முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளனர். 18 வயது நிரம்பிய அனைவரும் விடுபடாத வகையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட வேண்டும். இறந்தவர்களின் பட்டியலை பெற்று அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலில் 100 சதவிகிதம் ஓட்டு பதிவை உறுதி செய்திடும் வகையில் 80 வயதிற்கு மேற்பட்ட வயதானர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களது இல்லங்களுக்கு நேரடியாக சென்று ஓட்டு பதிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வயது முதிர்ந்தவர்களை வாக்கு சாவடி மையங்களுக்கு அழைத்து வர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் கடந்த தேர்தல்களில் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வாக்குபதிவுகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டுள்ளது. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விதமான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுகிழமை), 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது பொதுமக்கள் அனைவரும் இம்முகாம்களை கட்டாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாநகராட்சி ஆணையாளர் ரா.மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்.பார்தீபன் (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), தேர்தல் வட்டாட்சியர், அனைத்து தேர்தல் அலுவலர்கள் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Similar News