தேனி மாவட்டம் 18ம் கால்வாயில் தூர்வாருதல், 13 இடங்களில் உள்ள பாலங்கள் சீரமைப்பு பணிக்காக அரசின் மூலம் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் கால்வாயில் விரைவில் நீர் திறக்க உள்ளதால், நீர்வளத்துறை சார்பில் தேவாரம் பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. விரைவில் மற்ற பகுதிகளில் பணிகள் துவங்கும் என நீர்வளத்துறையினர் தகவல்.