ரூ.18 கோடியில் 1090 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நாள் விழாவில் 1090 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 65 லட்சத்து 33 ஆயிரத்து 651 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்:-;
மயிலாடுதுறையில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை பல்வேறு துறை சார்பில் 1090 பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் முதல் அறுவடைஎந்திரம்வரை ரூ.18 கோடியே 65 லட்சத்து 33 ஆயிரத்து 641 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த், கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம், எம்எல்ஏக்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், நகர்மன்ற தலைவர் |குண்டாமணிசெல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.