ரூ.189.69 லட்சம் மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம்!
புதிதாக கட்டப்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ரூ.189.69 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை தரமாக கட்ட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார் .இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நகராட்சி ஆணையர் உட்பட பலர் உடனிருந்தனர்.