19வது வார்டில் மாநகராட்சி மேயர் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 19வது வார்டுக்கு உட்பட்ட கருங்காடு ரோடு, பாண்டியாபுரம் தெரு, சிறிய காலங்கள், சந்தன மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று (மே 20) மேயர் ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது 19வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சை, உதவி செயற்பொறியாளர் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.