2 வாலிபர்கள் உயிரிழப்பு

உயிரிழப்பு;

Update: 2025-09-08 04:08 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வட மாமந் துார் தர்கா பகுதியை சேர்ந்தவர்கள் தஸ்தகரி மகன் ரசாக், 18, சபிக் மகன் சையத் அப்தப், 18. இவர்கள், 'யமாஹா' பைக்கில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, வட மாமந்துாரில் இருந்து மூங்கில்துறைப்பட்டு நோக்கி சென்றனர்.அப்போது, சாலையோரம் கரும்பு லோடு ஏற்றிய டிராக்டர் டிப்பர் நிறுத்தப்பட்டு இரு ந்தது. அதை அறியாமல், சையத் அப்தப், ரசாக் சென்ற பைக், டிராக்டர் டிப்பர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News