சேந்தமங்கலம் அருகே திருட்டு சம்பவத்தில் 2பேர் கைது

Update: 2023-10-25 14:57 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேந்தமங்கலம் அடுத்த துத்திகுளம், சென்னை, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நேரத்தில் வழிபறி சம்பவம் நடப்பதாக மாவட்ட எஸ்.பி., ராஜேஷ்கண்ணாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, டி.எஸ்.பி., தனராசு மேற்பார்வையில் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னை, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகபடும் நிலையில் சேந்தமங்கலம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பெயிண்டர் விக்னேஷ். 22, மலைவேப்பன்குட்டை பகுதியை சேர்ந்த சரத்குமார், 24. இருவரும் நின்றிருந்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன் வலிபர் ஒருவரிடம் ஒரு பவுன் சயின், 90 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டனர். சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News