எடப்பாடியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்

எடப்பாடியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-02-28 09:02 GMT

எடப்பாடியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்திய அரசு அறிவித்துள்ள MSME 43 B (f) சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக சுமார் ஐந்து கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு .  சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும் இந்த விசைத்தறி தொழிலை நம்பியே சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இருந்து வருகின்றனர்.

இதனிடையே மத்திய அரசு சிறு குறு மற்றும் நடுத்தர ஜவுளி  உற்பத்தி தொழில் செய்து வருபவர்களுக்கு MSME 43 B (f) என்ற சட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எடப்பாடி வட்டாரத்தில் செயல்பட்டு வரும் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இரண்டு நாள் அடையாளமாக ஜவுளி உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறும்போது மத்திய அரசு அறிவித்துள்ள எம் எஸ் எம் இ 43 பி (எஃப்) சட்டம் சிறு குறு மற்றும் நடுத்தர ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் இதனால் பெரிய நிறுவன உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே பலன் என்றும் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும், இதே நிலை நீடித்தால் தங்களது தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டி நேரிடும் எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

எனவே மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறு குறு மற்றும் நடுத்தர ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.

Tags:    

Similar News