குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் பயணம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Update: 2023-11-23 05:22 GMT

ஆபத்தான முறையில் குடிநீர் எடுக்கும் மக்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி ஊராட்சி, கல்குறிச்சி, ஆலங்குளம் ஆகிய கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இக்கிராமங்களுக்கு வைகையாற்றை ஒட்டி ஆழ்துளை கிணறு கீழ்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இரண்டு கிலோமீட்டர் சென்று ஆற்றையோட்டி உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஆபத்தான முறையில் குடிநீர் எடுத்து வருகின்றனர். சிலர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அப்போது மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News