சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக மாற்றம்....
சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டன.;
By : King 24x7 Angel
Update: 2024-07-09 12:27 GMT
பட்டாசு ஆலை வெடி விபத்து
சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக மாற்றம். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள காளையார்குறிச்சியில் முத்துவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.இந்த பட்டாசு ஆலை மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை மூலம் அனுமதி பெற்று இயங்கி வருகிறது.இன்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிர் இழந்தனர்.மேலும் சரோஜா மற்றும் சங்கரவேல் ஆகிய இரண்டு பேர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு பேரும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டன.