செவிலியரிடம் செயின் பறிப்பு : 2 பேர் கைது

திருமயம் அருகே செவிலியரிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;

Update: 2024-01-01 06:33 GMT

காவல்நிலையம்

திருமயம் அருகே உள்ள கடியாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிபவர் தேவகி (57). இவர் சம்பவத்தன்று பஸ் ஏறுவதற்காக சிதம்பர வீதியில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் முகவர் கேட் பதுபோல நடித்து தேவகி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினை பறித்துச்சென்று தப்பிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சமாகும். இதுகுறித்து தேவகி அளித்த புகாரின் திரும்யம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement

இன்ஸ்பெக் டர் குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் திருமயம் பைரவர் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, தீவிர விசாரணையில் வழிப்பறி நபர்கள் என்பதும் செவிலியரிடம் செயின் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணமேல்குடி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்த மாதவன் (24), இலுப்பூர் பிரிவிராஜ்(27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நகை 'மற்றும் பைக்கை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News