பொதுமக்களுக்கு இடையூறு செய்த 2 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் , வந்தவாசி - சேத்துப்பட்டு பகுதியில் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-04-21 08:36 GMT
திருவண்ணாமலை மாவட்டம் , வந்தவாசி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் 2 பேர் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வடவணக்கம்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.