சித்தப்பா மகன் கொலை - பெரியப்பா மகன்கள் கைது
Update: 2023-12-14 02:56 GMT
கைது
மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே கணவாய்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன்(37). இவரது குடும்பத்தினருக்கும், இவரது பெரியப்பா ராசு (75) குடும்பத்தினருக்கும் சொத்துப் பிரச்னை இருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் பெரியப்பா மகன்களால் வெட்டப்பட்ட முருகேசன் உயிரிழந்தாா். மேலும் காயமடைந்த இவரது சகோதரா் கருப்பையா(38), மாமனாா் பிச்சை (50) ஆகியோா் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். இதையடுத்து ராசு மற்றும் அவரது மகன் செல்லதுரை (33) ஆகிய இருவரையும் புத்தாநத்தம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்நிலையில் ராசுவின் மற்ற மகன்களாகிய பாலையா, பொன்னுசாமி(எ)குஞ்சான் ஆகியோரை போலீஸாா் நேற்று கைது செய்தனா்.