தூத்துக்குடியில் வழக்கறிஞர் உட்பட 2பேருக்கு கத்தி குத்து: வாலிபர் கைது
தூத்துக்குடியில் வழக்கறிஞர் உட்பட 2பேரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் வழக்கறிஞர் உட்பட 2பேரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 8வது தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் ராஜ்குமார் (42). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று இரவு அப்பகுதியில் தனது நண்பரான அந்தோணி மகன் அனீஸ் (25) என்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தருவைகுளம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தூரப்பாண்டி மகன் பேச்சிமுத்து (35) என்பவர் அப்பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு வந்தாராம்.
அவரைப் பார்த்து ராஜ்குமார், "நீங்கள் யார் என்று தெருவில் உங்களை பார்த்ததே இல்லை" என்று கூறினாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பேச்சிமுத்து தனது அண்ணன் வீட்டுக்கு சென்று அங்கு இருந்த கத்தியை எடுத்து வந்து வழக்கறிஞர் ராஜகுமாரை கத்தியால் கத்தியால் குத்தியுள்ளார்.
இதனை தடுக்க முயன்ற அவரது நண்பரான அனீஸ்-க்கும் கத்தி குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்கு பதிவு செய்து பேச்சிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.