மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
By : King 24x7 Website
Update: 2023-12-27 17:00 GMT
தூத்துக்குடி சமீர்வியாஸ் நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் இசக்கிராஜா (20). இவர் நேற்று தூத்துக்குடி - எட்டையாபுரம் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது 2பேரை அவரை மறித்து அவரிடம் இருந்த ரூ.2ஆயிரம் பணத்தை பறித்து சென்று விட்டனர். இது குறித்து இசக்கி ராஜா சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி கேவிகே சாமி நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் அய்யாதுரை (26), முத்துகிருஷ்ணா புரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் அலிஸ்கர் (31) ஆகிய 2பேரும் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.