காவலரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
திருவேங்கடத்தில் காவலரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;
Update: 2023-12-27 08:39 GMT
திருவேங்கடத்தில் காவலரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் குலசேகரன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மத்திய பிரிவு போலீசாராக பணி செய்து வருகின்றனர் அதே ஊரை சேர்ந்த தியாகராஜ் தற்போது காவலர் தேர்வு எழுதி உள்ள நிலையில் இருவரும் மது போதையில் இருந்த போது ஏற்பட்ட தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த திருவேங்கடம் போலீசார் ஆன உதயராஜ் இருவரின் சண்டையை விலக்கி உள்ளார் பின்னர் இருவரும் சேர்ந்து காவலர் உதயராஜை தாக்கியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த திருவேங்கடம் போலீசார் மது போதையில் இருந்த இருவரையும் பிடித்து தற்போது விசாரணை மேற்கொண்டனர் .