காஞ்சியில் 20 ஆட்டோக்கள் பறிமுதல்
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் இணைந்து திடீர் ஆய்வு செய்தார்.;
பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்
காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக ஆட்டோக்கள் திகழ்வது ஆகும் சாலை பாதுகாப்பு விதிகளை உரிய முறையில் கடைபிடிக்காததால் விபத்துகளுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறிவந்த பொதுமக்கள் இதனைக் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் இணைந்து பேருந்து நிலையம் அருகே மாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 20 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டு வாகனத்திற்கான ஆவணங்கள் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை காத்திருந்தது.
வாகனம் ஓட்டி வந்த நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாததும், வாகனத்திற்கான உரிமம் புதுப்பிக்காததும், வாகன ஓட்டி வந்த நபரும் இங்கு ஆஜரான நபரும் மாறி இருந்த காட்சிகளும் கண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வாகன உரிமையாளரும் வரவழைக்கப்பட்டு அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை அளித்தது குறித்து அவர்களுக்கு எச்சரித்தும் அபராதம் விதித்தனர்.20 நிமிடங்களே ஆய்வு நடத்திய நிலையில் இருபதுக்கு மேற்பட்ட வாகனங்கள் பிடிபட்டதும்,
மேலும் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தினால் அதிக அளவில் அரசு விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் பிடிபடும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.